தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS): திட்டத்தின் சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்தப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

அரசு அலுவலர்களின் நலன் காப்பதில் இந்த அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:

  • அகவிலைப்படி உயர்வு: 2022-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசிற்கு இணையாக அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
  • ஈட்டிய விடுப்பு: 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • காப்பீட்டுத் தொகை: அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
  • கல்வி முன்பணம்: தொழிற்கல்விக்கு 1 இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 50 ஆயிரம் ரூபாயாகவும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • திருமண முன்பணம்: அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வீடு கட்டும் முன்பணம்: வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
  • மகப்பேறு விடுப்பு: பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியப் பணிக்கொடை: ஓய்வூதியப் பணிக்கொடை 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

Also Read in English : Tamil Nadu Assured Pension Scheme (TAPS): TN Govt

புதிய TAPS திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப. தலைமையிலான குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 50% ஓய்வூதியம்: மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  2. அரசின் பங்களிப்பு: பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
  3. அகவிலைப்படி உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
  4. குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  5. பணிக்கொடை: ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
  6. குறைந்தபட்ச ஓய்வூதியம்: தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
  7. சிறப்பு கருணை ஓய்வூதியம்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, இத்திட்டம் வருவதற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதால் தமிழ்நாடு அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாயும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களைத் தரும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us on WhatsApp, Telegram, Twitter and Facebook for all latest updates

joinwhatsapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Just In